/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'குடிநீர் கட்டணத்தை தாமதமின்றி செலுத்துங்க' 'குடிநீர் கட்டணத்தை தாமதமின்றி செலுத்துங்க'
'குடிநீர் கட்டணத்தை தாமதமின்றி செலுத்துங்க'
'குடிநீர் கட்டணத்தை தாமதமின்றி செலுத்துங்க'
'குடிநீர் கட்டணத்தை தாமதமின்றி செலுத்துங்க'
ADDED : ஜூன் 16, 2024 05:29 AM
ஆத்துார் : ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் அறிக்கை:
ஆத்துார் நகராட்சியில் குடிநீர் கட்டணம், 3 மாதங்களுக்கு ஒருமுறை என, ஆண்டுக்கு, 4 தவணை வசூலிக்கப்படுகிறது. 1 முதல், 15ம் தேதிக்குள் சில குடிநீர் இணைப்புதாரர்கள், நகராட்சி கணினி மையத்தில் செலுத்துகின்றனர். சிலர் காலாண்டு முடிவுற்றும், இன்னும் சிலர் ஓராண்டுக்கு மேலும் குடிநீர் கட்டணம் செலுத்துவதில்லை.
குடிநீர் வினியோக பணியை மேம்படுத்த, மக்களே முன்வந்து நிலுவை கட்டணங்களை, 15 நாட்களுக்குள், நகராட்சி கணினி மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் குடிநீர் இணைப்பை துண்டிப்பதோடு விதிகளுக்கு புறம்பாக மின்விசை மோட்டார் இருக்கும்பட்சத்தில் பறிமுதல் செய்யப்படும்.
மறு இணைப்பு வேண்டுவோர், குடிநீர் கட்டணம் நிலுவையின்றி செலுத்துவதோடு துண்டிப்புக்கு, 500, மறுஇணைப்புக்கு, 500, அபராதம், 5,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும்.