பழனிசாமி இல்லம் தொடர்ந்து 'வெறிச்'
பழனிசாமி இல்லம் தொடர்ந்து 'வெறிச்'
பழனிசாமி இல்லம் தொடர்ந்து 'வெறிச்'
ADDED : ஜூன் 06, 2024 02:44 AM

சேலம்:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இல்லம், சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ளது. அங்கு, பழனிசாமி வந்தாலே, உள்ளூர் நிர்வாகிகள் முதல், மாவட்ட நிர்வாகிகள் வரை சந்திக்க வந்தபடி இருப்பர். இதனால் அவரது இல்லம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். உள்ளூர் நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாத சூழலில், பழனிசாமி சென்னை புறப்பட்டு விடுவார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில், அ.தி.மு.க., கூட்டணி, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்ததால், பழனிசாமி வீடு நிர்வாகிகள், தொண்டர்கள் இல்லாமல் வெறிச்சோடியது. 2ம் நாளான நேற்றும் பழனிசாமி எங்கும் செல்லாமல் வீட்டில் தங்கி இருந்தார். ஆனால் தோல்வியால், 'அப்செட்' ஆக இருப்பார் என கருதும் நிர்வாகிகள், அவரை சந்திப்பதை தவிர்க்கின்றனர். இதனால் நேற்றும் நெடுஞ்சாலை நகர் இல்லம் எந்த பரபரப்பும் இல்லாமல் காணப்பட்டது.