Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சவர தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வட மாநிலத்தவர்கள்

சவர தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வட மாநிலத்தவர்கள்

சவர தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வட மாநிலத்தவர்கள்

சவர தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வட மாநிலத்தவர்கள்

ADDED : ஜூலை 19, 2024 01:44 AM


Google News
இடைப்பாடி:'இடைப்பாடி பகுதியில், வடமாநிலத்தவர்கள் சவர தொழில் செய்ய முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்' என, சவர தொழிலாளர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

சேலம் மாவட்டம், இடைப்பாடியில் ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் இரு சலுான் கடைகளை வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இடைப்பாடி சவர தொழிலாளர் சங்க தலைவர் பழனிசாமி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் இடைப்பாடி போலீசாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் இடைப்பாடியில், 110 கடைகள் வைத்து பல ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இடைப்பாடியில் உள்ள நைனாம்பட்டி, வெள்ளாண்டிவலசு பகுதிகளில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சவரத் தொழில் செய்ய கடை நடத்த முயற்சித்து வருகின்றனர்.

அவர்கள் இங்கு வந்து தொழில் செய்தால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வடமாநில தொழிலாளர்கள், இப்பகுதிகளில் கடை வைக்க அனுமதிக்க வேண்டாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us