/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இயற்கை சாகுபடி இலவச பயிற்சி முன்பதிவு செய்ய வேண்டுகோள் இயற்கை சாகுபடி இலவச பயிற்சி முன்பதிவு செய்ய வேண்டுகோள்
இயற்கை சாகுபடி இலவச பயிற்சி முன்பதிவு செய்ய வேண்டுகோள்
இயற்கை சாகுபடி இலவச பயிற்சி முன்பதிவு செய்ய வேண்டுகோள்
இயற்கை சாகுபடி இலவச பயிற்சி முன்பதிவு செய்ய வேண்டுகோள்
ADDED : ஜூன் 16, 2024 06:47 AM
பனமரத்துப்பட்டி : இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வதற்கான இலவச பயிற்சிக்கு முன்பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் அறிக்கை:
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் அங்கக சாகுபடியாளர் இலவச பயிற்சி, வரும், 24ல் தொடங்கி, 25 நாட்கள் நடக்க உள்ளது.
இயற்கை முறையில் விதைப்பு முதல் அறுவடை வரையிலும் மற்றும் மதிப்பூட்டுதல் பற்றியும் பயிற்சி அளிக்கப்படும்.விருப்பம் உள்ள விவசாயிகள், 90033 03070 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முதலில் பதிவு செய்யும், 25 விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயிற்சி முடிவில் இயற்கை விவசாயி சான்றிதழ் வழங்கப்படும்.