/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விழாதபடி பேனர்களை கட்ட நகராட்சி கமிஷனர் உத்தரவு விழாதபடி பேனர்களை கட்ட நகராட்சி கமிஷனர் உத்தரவு
விழாதபடி பேனர்களை கட்ட நகராட்சி கமிஷனர் உத்தரவு
விழாதபடி பேனர்களை கட்ட நகராட்சி கமிஷனர் உத்தரவு
விழாதபடி பேனர்களை கட்ட நகராட்சி கமிஷனர் உத்தரவு
ADDED : ஜூன் 12, 2024 06:44 AM
ஆத்துார் : ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வணிக வளாக கடை மேற்பகுதியில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் சூறாவளி காற்று வீசியபோது, அங்குள்ள ஓட்டல் மேற்பகுதியில் இருந்த தனியார் நகை கடை பேனர் விழுந்து, இருக்கையில் அமர்ந்திருந்த சேலத்தை சேர்ந்த பயணி காயம் அடைந்தார். இந்த வீடியோ காட்சி பரவியது. இதையடுத்து ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் தலைமையில் அலுவலர்கள் நேற்று ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து சையது முஸ்தபா கமால் கூறுகையில், ''பிடிமானம் இல்லாத பேனர்களை அவிழ்த்து கீழே விழாதபடி கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது,'' என்றார்.