ADDED : ஜூலை 26, 2024 02:18 AM
பெ.நா.பாளையம்: மின் கட்டண உயர்வை திரும்ப பெற க்கோரி, மா.கம்யூ., சார்பில் பெத்தநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று, கண்-டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை செயலர் ராமசாமி தலைமை வகித்தார். அதில் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங், மாவட்ட செயலர் சண்முகராஜா, தாலுகா செயலர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் சேலத்தில், மாவட்ட செயலர் மேவை சண்முகராஜா தலை-மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.