/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கந்தசாமி கோவில் மண்டல பூஜை 108 சங்காபிேஷகத்துடன் நிறைவு கந்தசாமி கோவில் மண்டல பூஜை 108 சங்காபிேஷகத்துடன் நிறைவு
கந்தசாமி கோவில் மண்டல பூஜை 108 சங்காபிேஷகத்துடன் நிறைவு
கந்தசாமி கோவில் மண்டல பூஜை 108 சங்காபிேஷகத்துடன் நிறைவு
கந்தசாமி கோவில் மண்டல பூஜை 108 சங்காபிேஷகத்துடன் நிறைவு
ADDED : ஜூன் 09, 2024 04:38 AM
வீரபாண்டி: காளிப்பட்டி கந்தசாமி கோவில் மண்டல பூஜை, 108 சங்காபிேஷகம், சிறப்பு யாகத்துடன் நிறைவடைந்தது.
சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கடந்த ஏப்.,21ல் கும்பாபி ேஷகம் நடத்தப்பட்டது. ஏப்.,22 முதல் 48 நாட்கள் மண்டல பூஜை துவங்கி தினசரி நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று புனித நீர் நிரம்பிய, 108 வலம்புரி சங்குளை 'ஓம்' வடிவில் யாக குண்டத்துக்கு முன்பு அடுக்கி வைத்து மலர்களால் அலங்கரித்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
பூஜை செய்த, 108 சங்குகளின் புனித நீரால் மூலவர் கந்தசாமிக்கு அபி ேஷகம் செய்து, ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதே போல் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் கந்தசாமிக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மண்டல பூஜை நிறைவு விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.