/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வெல்லம் விலை அதிகரிப்பு 30 கிலோ மூட்டை ரூ.1,550 வெல்லம் விலை அதிகரிப்பு 30 கிலோ மூட்டை ரூ.1,550
வெல்லம் விலை அதிகரிப்பு 30 கிலோ மூட்டை ரூ.1,550
வெல்லம் விலை அதிகரிப்பு 30 கிலோ மூட்டை ரூ.1,550
வெல்லம் விலை அதிகரிப்பு 30 கிலோ மூட்டை ரூ.1,550
ADDED : மார் 15, 2025 02:11 AM
செவ்வாய்ப்பேட்டை:சேலம், செவ்வாய்ப்பேட்டை தினசரி வெல்ல மார்க்கெட்டுக்கு, சுற்றுப்பகுதிகளில் இருந்து தினமும், 250 டன்னுக்கு மேல் வெல்லம் வரத்து உள்ளது. சில நாட்களாக அதன் விலை உயர்ந்த நிலையில், குண்டு வெல்லம் நேற்று, 30 கிலோ மூட்டை, 1,550 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சில்லரை விற்பனையிலும் கிலோவுக்கு, 10 ரூபாய் வரை உயர்ந்து, 65 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதன் துணை பொருட்களான நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம் விலையும், கிலோவுக்கு, 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
வெல்ல உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'கடந்த வாரம், 30 கிலோ மூட்டை தரத்தை பொறுத்து, 1,200 -- 1,400 ரூபாய் வரை விற்றது. தற்போது, 1,400 -- 1,550 ரூபாய் வரை விற்கிறது. யுகாதி, தமிழ் ஆண்டு பிறப்பு உள்ளிட்ட நேரங்களில் வெல்லத்தின் தேவை அதிகரிக்கும்.
'தற்போது முன்கூட்டியே விலை உச்சத்தை தொட்டுள்ளது. கரும்பு பற்றாக்குறை, சர்க்கரை விலை ஏற்றம், வெல்லம், நாட்டு சர்க்கரை நுகர்வு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை அதிகரித்து வருகிறது' என்றனர்.