மதமாற்ற முயற்சியா மக்கள் வாக்குவாதம்
மதமாற்ற முயற்சியா மக்கள் வாக்குவாதம்
மதமாற்ற முயற்சியா மக்கள் வாக்குவாதம்
ADDED : ஜூலை 07, 2024 02:38 AM
மகுடஞ்சாவடி:சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, நடுவனேரி ஊராட்சி பாட்டப்பன் கோவில் வழியில் நேற்று காலை, 11:00 மணிக்கு, கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த, 3 பேர் வந்தனர். அவர்கள், அப்பகுதியில் உள்ள இந்து குடும்பங்களை சேர்ந்த ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று துண்டு பிரசுரம் வழங்கினர்.
அப்போது, மதம் மாற அறிவுறுத்தியதாக தகவல் பரவியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலர், 'மதமாற்ற ஏன் முயற்சிக்கிறீர்கள். உங்கள் வழிபாட்டை நாங்கள் தடுத்தோமா? இங்கிருந்து கிளம்புங்கள்' என அறிவுறுத்தினர். இதையடுத்து, 3 பேரும் கிளம்பினர்.
அப்பகுதியினர் கூறுகையில், 'ஒரு வேனில் வந்த, 9 பேர் கும்பல், 3 குழுவாக பிரிந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை எச்சரித்து அனுப்பினோம். சில நாட்களாக மகுடஞ்சாவடியில் இந்த கும்பல் துண்டு பிரசுரம் வழங்கி வருகிறது. இதனால் அசம்பாவிதம் ஏற்படும் முன், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.