/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தக்காளி வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.30க்கு விற்பனை தக்காளி வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.30க்கு விற்பனை
தக்காளி வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.30க்கு விற்பனை
தக்காளி வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.30க்கு விற்பனை
தக்காளி வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.30க்கு விற்பனை
ADDED : ஜூலை 24, 2024 10:20 PM
தலைவாசல்:சேலம் மாவட்டம் தலைவாசல், வீரகனுார், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகின்றன. கடந்த வாரம் பெங்களூரில் பெய்த கனமழையால் தக்காளி வரத்து குறைந்தது; உள்ளூர் தக்காளியும் போதிய அளவில் வரவில்லை. இதனால் மார்க்கெட்டில் தக்காளி கிலோ, 60 - 70 ரூபாய்க்கு விற்றது. ஆனால், நேற்று 30 - 50 ரூபாயாக சரிந்தது. வெளி மார்க்கெட்டில் கிலோ 60 ரூபாயாக குறைந்தது.
அதேபோல, ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு பல பகுதிகளிலிருந்து தக்காளி வரத்தாகிறது. நேற்று மார்க்கெட்டுக்கு, 6,000 பெட்டிகள் வரை தக்காளி வந்தது. இதனால் 1 கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையானது.
/ மரவள்ளிக்கிழங்கு /
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சுற்று வட்டார பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த வாரம், மரவள்ளி கிழங்கு டன், 12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம், 2,000 ரூபாய் வரை குறைந்து, 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதுபோல, 'சிப்ஸ்' தயாரிக்க பயன்படுத்தும் மரவள்ளிக்கிழங்கு, கடந்த வாரம், 14,000 ரூபாய்க்கு விற்றது, 1,000 ரூபாய் குறைந்து, 13,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.