/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மனைவி இறந்ததால் உள்துறை செயலர் தற்கொலை மனைவி இறந்ததால் உள்துறை செயலர் தற்கொலை
மனைவி இறந்ததால் உள்துறை செயலர் தற்கொலை
மனைவி இறந்ததால் உள்துறை செயலர் தற்கொலை
மனைவி இறந்ததால் உள்துறை செயலர் தற்கொலை
ADDED : ஜூன் 19, 2024 02:42 AM
கவுகாத்தி, அசாம் மாநில உள்துறை செயலர் சிலாதித்யா சேதியா, 44, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மனைவி இறந்த துக்கத்தில்
ஐ.சி.யூ., அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அசாம் மாநில உள்துறைச் செயலர் சிலாதித்யா சேதியா. இவரது மனைவி புற்றுநோய் பாதிப்பின் இறுதி கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தார். மனைவியை உடன் இருந்து பார்த்துக் கொள்வதற்காக கடந்த நான்கு மாதங்களாக விடுமுறையில் இருந்தார் சிலாதித்யா. சமீபத்தில், அவரது மனைவியின் உடல்நலம் மோசமானதால், கவுகாத்தியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவரது மனைவி நேற்று மாலை இறந்தார். இந்த தகவல் சிலாதித்யாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஐ.சி.யூ., வார்டுக்குச் சென்ற அவர், மனைவிக்காக பிரார்த்திக்க உள்ளதாக கூறி, டாக்டர்களை வெளியே செல்லும்படி கூறியுள்ளார். டாக்டர்கள் வெளியே சென்றதும், தன் கை துப்பாக்கியால் சுட்டு ஐ.சி.யூ., வார்டிலேயே தற்கொலை செய்துகொண்டார். இதனால், மருத்துவமனையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.