ADDED : ஜூலை 26, 2024 02:08 AM
சேலம்: சேலம், சின்னதிருப்பதியை சேர்ந்த, சிவில் இன்ஜினியர், வெளி-நாட்டில் பணிபுரிகிறார். இவரது வாட்ஸாப்புக்கு கடந்த ஏப்., 7ல் குறுந்தகவல் வந்தது. தொடர்ந்து பேசிய மர்ம நபர், 'பகுதி நேர வேலை, பங்குச்சந்தையில் முதலீடாக, 50 லட்சம் ரூபாய் கட்டினால், 1 கோடி ரூபாய் கிடைக்கும். அதற்கு நான் தெரி-விக்கும் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும்' என தெரிவித்தார். அதை நம்பிய சிவில் இன்ஜினியர், 49.93 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார். பிறகு, மர்ம நபர் பேசிய மொபைல் அணைத்து வைக்கப்பட்டது.
இன்ஜினியர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார், வங்கி கணக்குகளை ஆய்வு செய்-ததில் அந்த கணக்கில், 27 லட்சம் ரூபாய் இருந்தது. அந்த பணத்தை முடக்கினர். மேலும் இன்ஜினியர் வங்கி கணக்குக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து விசா-ரணையும் நடக்கிறது.