/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விபத்தில் தந்தை, மகள் உயிரிழப்பு டிரைவருக்கு 2 ஆண்டு சிறை விபத்தில் தந்தை, மகள் உயிரிழப்பு டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
விபத்தில் தந்தை, மகள் உயிரிழப்பு டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
விபத்தில் தந்தை, மகள் உயிரிழப்பு டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
விபத்தில் தந்தை, மகள் உயிரிழப்பு டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 30, 2024 02:54 AM
சங்ககிரி: சங்ககிரி அடுத்த வைகுந்தம் பகுதியில் சாலை விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த வழக்கில்,கார் டிரைவருக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், ஊராட்சிக்கோட்டை, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி கண்ணையன், 31, இவரது மனைவி அம்பிகா, இவர்களது மகள் சிவன்யாஸ்ரீ, 3. மூவரும் கடந்த 2021ம் ஆண்டு நவ., 14ல் ஸ்கூட்டியில் காளிகவுண்டம்பாளை-யத்திலிருந்து, பவானி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்-போது, வைகுந்தம் பஸ் ஸ்டாப் அருகே, பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் கண்ணையன், மகள் சிவன்யாஸ்ரீ இறந்தனர். அம்பிகா காயமடைந்தார்.
சங்ககிரி போலீசார் கார் டிரைவர் கோபி, உடையகவுண்டன்பா-ளையத்தை சேர்ந்த பாலவிக்னேஷை, 31, கைது செய்து சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்-தனர். இவ்வழக்கை நீதிபதி பாபு விசாரித்து, பால விக்னேஷூக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.