/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'கத்திரி' முடிந்து 2 மாதமாகியும் சாலையில் தெரியும் 'கானல் நீர்' 'கத்திரி' முடிந்து 2 மாதமாகியும் சாலையில் தெரியும் 'கானல் நீர்'
'கத்திரி' முடிந்து 2 மாதமாகியும் சாலையில் தெரியும் 'கானல் நீர்'
'கத்திரி' முடிந்து 2 மாதமாகியும் சாலையில் தெரியும் 'கானல் நீர்'
'கத்திரி' முடிந்து 2 மாதமாகியும் சாலையில் தெரியும் 'கானல் நீர்'
ADDED : ஜூலை 25, 2024 11:54 PM
சேலம்:தமிழகத்தில் நடப்பாண்டு, 'கத்திரி' எனும் அக்னி நட்சத்திர வெயில் காலம் கடந்த மே, 4ல் துவங்கி, மே, 28ல் முடிந்தது. தொடர்ந்து படிப்படியாக வெப்பம் குறையும் என எதிர்பார்த்த நிலையில், அக்னி நட்சத்திரம் முடிந்து இரு மாதங்களுக்கு மேலாகியும், இன்று வரை வெப்ப அளவு குறையாமல் கொளுத்தி வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த, 10 நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது.
காலை முதலே வெயில் சுட்டெரிக்கிறது. மதியம் சாலைகளில், 'கானல் நீர்' காட்சிகளாக தெரிகின்றன. தென் மேற்கு பருவ மழையும் எதிர்பார்த்த அளவு இல்லாத நிலையில் ஆடி மாதத்திலும், 'கத்திரி' வெயில் போல் சுட்டெரிப்பதால், சாலைகளில் அனல் பறக்கிறது. அதேநேரம் மாலையில், பகல் நேர வெப்பத்தை தணித்து இதமான குளிர் காற்றுடன் சாரல் மழை பொழிகிறது. ஒரே நாளில் வெயில், குளிர் என, மாறி மாறி வருகிறது.