Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆக., 6ல் ஒன்றிய தலைவர் தேர்வு

ஆக., 6ல் ஒன்றிய தலைவர் தேர்வு

ஆக., 6ல் ஒன்றிய தலைவர் தேர்வு

ஆக., 6ல் ஒன்றிய தலைவர் தேர்வு

ADDED : ஜூலை 28, 2024 03:45 AM


Google News
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நாகியம்பட்டியை சேர்ந்தவர் பிரியா, 30. அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து கெங்கவல்லி ஒன்றிய குழு தலை-வியாக தேர்வு செய்யப்பட்டார்.

தி.மு.க., ஆட்சிக்கு பின் அமைச்சர் நேரு முன்னிலையில் அக்கட்-சியில் இணைந்தார். அவர் மீது, தி.மு.க., கவுன்சிலர்கள், பல்-வேறு புகார் தெரிவித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, அப்போதைய கலெக்டரிடம் மனு அளித்தனர். 2023 டிசம்-பரில் நடந்த ஓட்டெடுப்பில், 9 கவுன்சிலர்கள், பிரியாவுக்கு எதி-ராக ஓட்டு போட்டனர்.

இந்த தீர்மான விபரங்களை, அப்போதைய ஆர்.டி.ஓ., ரமேஷ், தமிழக அரசுக்கு அனுப்பினார். கடந்த பிப்., 16ல், தலைவியை பதவியில் இருந்து நீக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நி-லையில் அப்பதவிக்கு ஆக., 6ல், தேர்தல் நடத்துவதாக, சேலம் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சங்கமித்ரா, நேற்று சுற்-றிக்கை அனுப்பியுள்ளார்.

இதற்கான அறிவிப்பை, கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் ஒட்டி, கவுன்சிலர்களுக்கு தபால் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், 'ஆக., 6 காலை, 10:30 மணிக்கு ஒன்றிய குழு தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான கவுன்சிலர் கூட்டம் நடக்க உள்ளது. அப்பதவி, எஸ்.சி., பெண் என, ஒதுக்கீடு செய்-யப்பட்டுள்ளது.

இத்தேர்தல் கூட்டத்தில், கவுன்சிலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us