/உள்ளூர் செய்திகள்/சேலம்/ துணைவேந்தரை தேர்வு செய்ய பெரியார் பல்கலையில் சிண்டிகேட் தேடல் குழு தேர்தல் துணைவேந்தரை தேர்வு செய்ய பெரியார் பல்கலையில் சிண்டிகேட் தேடல் குழு தேர்தல்
துணைவேந்தரை தேர்வு செய்ய பெரியார் பல்கலையில் சிண்டிகேட் தேடல் குழு தேர்தல்
துணைவேந்தரை தேர்வு செய்ய பெரியார் பல்கலையில் சிண்டிகேட் தேடல் குழு தேர்தல்
துணைவேந்தரை தேர்வு செய்ய பெரியார் பல்கலையில் சிண்டிகேட் தேடல் குழு தேர்தல்
ADDED : ஜூன் 07, 2024 07:15 PM
ஓமலுார்:சேலம் பெரியார் பல்கலையில் துணைவேந்தராக ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். அவரது பதவிக்காலம் இம்மாத இறுதியில் நிறைவு பெறுகிறது. இதற்காக புதிய துணைவேந்தர் தேடுதல் குழு அமைக்கப்படும். அதில் அரசு (கவர்னர்) சார்பில் ஒரு உறுப்பினரும், பெரியார் பல்கலை ஆட்சி பேரவை (சிண்டிகேட்) சார்பில் ஒரு உறுப்பினரும், ஆட்சிக்குழு (சென்ட்) சார்பில் ஒரு உறுப்பினர் என, மூவர் நியமிக்கப்படுவர்.
ஏற்கனவே ஆட்சிக்குழு சார்பில், திறந்தவெளி பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று பெரியார் பல்கலை ஆட்சி பேரவை (சிண்டிகேட்) சார்பில், உறுப்பினர் தேர்வுக்கான தேர்தல், துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் நடந்தது. உயர்கல்வித்துறை அரசு துணை செயலர் ஹென்றி இளங்கோ உட்பட, 22 பேர் பங்கேற்றனர். அதில், சேலம் பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் தங்கராஜ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பிச்சமணி ஆகிய இருவர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். அதில், 16 ஓட்டுகள் பெற்று தங்கராஜ், தேடுதல் குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.