/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தி.மு.க., முப்பெரும் விழா மத்திய மா.செ., அழைப்பு தி.மு.க., முப்பெரும் விழா மத்திய மா.செ., அழைப்பு
தி.மு.க., முப்பெரும் விழா மத்திய மா.செ., அழைப்பு
தி.மு.க., முப்பெரும் விழா மத்திய மா.செ., அழைப்பு
தி.மு.க., முப்பெரும் விழா மத்திய மா.செ., அழைப்பு
ADDED : ஜூன் 14, 2024 01:19 AM
சேலம், கோவையில் நடக்க உள்ள, தி.மு.க., முப்பெரும் விழாவில் பங்கேற்க, கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க.,வின் சேலம் மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன் அறிக்கை:
தமிழகத்தில், 40 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி, கட்சியை வழிநடத்தும் தலைவருக்கு பாராட்டு உள்பட, தி.மு.க., முப்பெரும் விழா ஜூன், 15ல்(நாளை) கோவை, கொடிசியா மைதானத்தில் நடக்க உள்ளது. தலைவர் தலைமையில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அதனால் நமது மாவட்ட கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி நிர்வாகிகள், கட்சி முன்னோடிகள், ஓட்டுச்சாவடி முகவர்கள் உள்ளிட்டோர் திரண்டு, முப்பெரும் விழாவை சிறப்பிக்க வேண்டும்.
கிழக்கு மா.செ.,
அதேபோல் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கமும், அவரது மாவட்டத்தில் உள்ள, முன்னாள், இன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணியினர் உள்ளிட்டோர் பங்கேற்க, அழைப்பு விடுத்துள்ளார்.