சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்
சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்
சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்
ADDED : ஜூலை 07, 2024 02:34 AM
சேலம்:சேலம் அருகே நெய்க்காரப்பட்டியில் ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. அங்கு சேதம் அடைந்த பால் கேன்களை சரிசெய்யும் பணி நடக்கிறது. ஈரோடு மாவட்டம், ஆதிரெட்டியூரை சேர்ந்த குமார், 42, கோவை மாவட்டம் உதயம்பாளையத்தை சேர்ந்த கோபி, 35, ஆகியோர், சேதம் அடைந்த பால் கேன்களுக்கு, 'வெல்டிங்' வைக்க நேற்று காலை வந்தனர்.
அப்போது அங்கு சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பற்றியதில் கோபி, குமார் படுகாயம் அடைந்தனர். சத்தத்தால் அருகில் உள்ளவர்கள் பதறியடித்து ஓடினர். அக்கம் பக்கத்தினர், படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கொண்டலாம்பட்டி போலீசார், விசாரிக்கின்றனர்.