/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஒன்றிய அலுவலக ஆவணங்களை பார்வையிட்ட சி.பி.சி.ஐ.டி., ஒன்றிய அலுவலக ஆவணங்களை பார்வையிட்ட சி.பி.சி.ஐ.டி.,
ஒன்றிய அலுவலக ஆவணங்களை பார்வையிட்ட சி.பி.சி.ஐ.டி.,
ஒன்றிய அலுவலக ஆவணங்களை பார்வையிட்ட சி.பி.சி.ஐ.டி.,
ஒன்றிய அலுவலக ஆவணங்களை பார்வையிட்ட சி.பி.சி.ஐ.டி.,
ADDED : ஜூன் 06, 2024 08:23 PM
மேட்டூர்:சேலம் மாவட்டம், கொளத்துார் ஒன்றியத்தில், 2015ல், பி.டி.ஓ.,வாக, கோபிநாத் என்பவர், 3 மாதங்கள் இருந்தார். அப்போது லஞ்சம் வாங்கியதாக விஜிலன்ஸ் போலீசார், அவரை கைது செய்தனர். தொடர்ந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ஆனால் லஞ்சம் வாங்கவில்லை என்பதை நிரூபிக்க, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த மாதம் ஓய்வு பெற்ற அவருக்கு பணப்பலன் கிடைக்கவில்லை.
கோபிநாத் கூறிய குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்ய, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று காலை, 11:30 மணிக்கு, சேலம் சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., தலைமையில், நான்கு போலீசார், கொளத்துார் ஒன்றிய அலுவலகம், பி.டி.ஓ., அலுவலகத்தில், 2 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக, 2015ல் நடந்த திட்டப்பணிகள் தொடர்பான ஆவணங்கள், அப்போது வழங்கப்பட்ட ரசீதுகளை பார்வையிட்டனர். தற்போதைய பி.டி.ஓ., அண்ணாதுரை உடனிருந்தார். மதியம், 1:35 மணிக்கு போலீசார் புறப்பட்டனர்.