/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மல்லுார் வழியே இயக்கப்படும் பஸ்கள் விபரம் சேகரிப்பு மல்லுார் வழியே இயக்கப்படும் பஸ்கள் விபரம் சேகரிப்பு
மல்லுார் வழியே இயக்கப்படும் பஸ்கள் விபரம் சேகரிப்பு
மல்லுார் வழியே இயக்கப்படும் பஸ்கள் விபரம் சேகரிப்பு
மல்லுார் வழியே இயக்கப்படும் பஸ்கள் விபரம் சேகரிப்பு
ADDED : ஜூலை 03, 2024 11:20 AM
பனமரத்துப்பட்டி: சேலம் - நாமக்கல் நான்கு வழிச்சாலை, மல்லுார் ஊருக்கு வெளியே உள்ளது. பஸ்கள் பைபாஸ் வழியே செல்வதால் மல்லுார் சுற்றுவட்டார பயணியர் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மல்லுார் ஊருக்குள் பஸ்கள் இயக்க வலியுறுத்தி, மக்கள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் போக்குவரத்து சீர்படுத்தும் பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சேலத்தில் இருந்து மல்லுார் வழியே இயக்கப்படும் அரசு பஸ்களின் விபரத்தை சேகரிக்கிறார். மல்லுார் வராத பஸ்கள், எதனால் வரவில்லை என்ற தகவலும் சேகரிக்கப்படுகிறது. இதனால் அரசு பஸ்கள், மல்லுார் வழியே இயக்கப்படுகின்றன.