/உள்ளூர் செய்திகள்/சேலம்/ திறந்தவெளியில் தேர்கள்: பாதுகாக்க வலியுறுத்தல் திறந்தவெளியில் தேர்கள்: பாதுகாக்க வலியுறுத்தல்
திறந்தவெளியில் தேர்கள்: பாதுகாக்க வலியுறுத்தல்
திறந்தவெளியில் தேர்கள்: பாதுகாக்க வலியுறுத்தல்
திறந்தவெளியில் தேர்கள்: பாதுகாக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 16, 2024 05:32 AM
சேலம் : சேலம், கோட்டை அழகிரிநாதர், சுகவனேஸ்வரர் கோவில் தேர் திருவிழா சமீபத்தில் நடந்தது. ஆனால் சின்னக்கடை வீதி, ராஜகணபதி கோவில் அருகே தேரடியில் நிறுத்தப்பட்டிருந்த தேர்களின் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த, இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்டிருந்த கூரைகள் அகற்றப்பட்டன.
தற்போது இரு கோவில்களின் தேரோட்டம் முடிந்து, 2 வாரங்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால் மீண்டும் கூரை அமைக்கப்படாத நிலையில் திறந்தவெளியில் தேர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து தேரில் உள்ள
சிற்பங்கள், அதன் பாகங்கள் சேதமாக வாய்ப்புள்ளதால், அதன் பாதுகாப்புக்கு
கூரை அமைக்க, பக்தர்கள் வலியுறுத்தினர்.