ADDED : ஜூலை 12, 2024 11:03 PM
சேலம்,:சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே சித்துாரை சேர்ந்தவர் தனபால், 40.
சங்ககிரி கிளை சிறையில் சமையலராக பணியில் இருந்தார். அங்கு வெளிச்சுவர் சேதம் அடைய, சிறை பூட்டப்பட்டு அங்கு பணிபுரிந்தவர்கள், சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கு கடந்த மாதம், 4ல், தனபால் பணி முடிந்து வெளியே வந்தார். அப்போது சிறை போலீசார் அவரை சோதனை செய்த நிலையில், 140 கிராம் போதை பொருள் இருப்பது தெரிந்தது. உடனே, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதுகுறித்து துறை ரீதியாக விசாரித்ததில், கைதிக்கு கொடுக்க பதுக்கி வைத்து கொண்டு வந்தது தெரிந்தது. இதனால் அவரை, பணி நீக்கம் செய்து, சிறை எஸ்.பி., வினோத் உத்தரவிட்டார்.