/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.23 லட்சம் மோசடி 6 பேர் மீது வழக்கு ரூ.23 லட்சம் மோசடி 6 பேர் மீது வழக்கு
ரூ.23 லட்சம் மோசடி 6 பேர் மீது வழக்கு
ரூ.23 லட்சம் மோசடி 6 பேர் மீது வழக்கு
ரூ.23 லட்சம் மோசடி 6 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 29, 2024 02:36 AM
சேலம்:சிவகங்கை மாவட்டம், இளையங்குடியை சேர்ந்தவர் செல்வசேதுபதி, 30; தனியார் மொபைல் நிறுவன தணிக்கை அலுவலர். சேலத்தில் சாரதா கல்லுாரி சாலையில் உள்ள ேஷா ரூமில் சில நாட்களுக்கு முன் தணிக்கை செய்தார்.
அப்போது, விலை உயர்ந்த, 31 மொபைல் போன், நான்கு மொபைல் போன்களில் பாகங்கள் குறைவாக இருந்தது தெரிந்தது. இதுகுறித்து, ஊழியர்களிடம் விசாரித்தபோது, போலி ரசீது வாயிலாக விற்று, 23.83 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதை கண்டுபிடித்தார்.
அவரது புகாரில், அழகாபுரம் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, கிளை மேலாளர் நுார் முகமது, விற்பனையாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சவுந்தரராஜன், ஹரிஹரன், கலைவாணன், பரத் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.