8 வார்டில் கழிப்பறைகட்ட பூமி பூஜை
8 வார்டில் கழிப்பறைகட்ட பூமி பூஜை
8 வார்டில் கழிப்பறைகட்ட பூமி பூஜை
ADDED : ஜூலை 04, 2024 11:11 AM
தாரமங்கலம்: தாரமங்கலம் நகராட்சியில் கழிப்பறைகள் கட்ட, 6, 7வது உயர்மட்ட குழு கூட்டு நடவடிக்கைகள் திட்டத்தில், 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதற்கு, 1, 2, 6 உள்பட, 8 வார்டுகளில் கழிப்பறை கட்ட முடிவு செய்யப்பட்டது. 6வது வார்டு பெரியாம்பட்டியில் நேற்று, நகராட்சி தலைவர் குணசேகரன் பூமிபூஜை செய்து கழிப்பறை கட்டுமானப்பணியை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் தனம், நகராட்சி கமிஷனர் சேம் கிங்ஸ்டன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அதேபோல் மற்ற வார்டுகளிலும் பூமி பூஜை நடந்தது.