Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பி.சி., - எம்.பி.சி., விடுதிகளில் சேர மாணவ, மாணவியருக்கு அழைப்பு

பி.சி., - எம்.பி.சி., விடுதிகளில் சேர மாணவ, மாணவியருக்கு அழைப்பு

பி.சி., - எம்.பி.சி., விடுதிகளில் சேர மாணவ, மாணவியருக்கு அழைப்பு

பி.சி., - எம்.பி.சி., விடுதிகளில் சேர மாணவ, மாணவியருக்கு அழைப்பு

ADDED : ஜூன் 10, 2024 01:56 AM


Google News
சேலம்: சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்படுத்த, சீர்மரபினர் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, 48 விடுதிகள் உள்ளன. பள்ளி விடுதியில், 4 முதல், பிளஸ் 2 வரை படிப்பவர்கள், கல்லுாரி விடுதியில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்பவர்கள் சேரலாம். 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 4 இணை சீருடை தைத்து வழங்கப்படும். 10, பிளஸ் 2 படிப்போர் கல்வி திறனை மேம்படுத்த சிறப்பு வழிகாட்டி, வினா வங்கி நுால்கள் வழங்கப்படும்.

கல்லுாரி விடுதி முதலாண்டில் சேருவோருக்கு ஜமக்காளம், பள்ளி விடுதியில் சேருவோருக்கு பாய்கள் உண்டு. விடுதியில் சேர பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருவாய், 2 லட்சம் ரூபாய்க்கு குறையாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து கல்வி நிலைய தொலைவு குறைந்தபட்சம், 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும். இது, மாணவியருக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவியர், விண்ணப்பத்தை, விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலக அறை எண்: 110ல் உள்ள மாவட்ட பிறபடுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெறலாம். பூர்த்தி செய்த பின் பள்ளி விடுதி விண்ணப்பத்தை வரும், 14க்குள்ளும், கல்லுாரி விடுதி விண்ணப்பத்தை ஜூலை, 15க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆண்டு வருவாய் சான்றிதழை, விடுதியில் சேரும்போது வழங்கினால் போதும். ஒவ்வொரு விடுதியிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தலா, 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தகவலுக்கு, 0427 - 2451333, 94454- 77849 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us