/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கலை, கைவினை பொருட்கள் போட்டி செந்தில் பப்ளிக் பள்ளி மாணவி சாதனை கலை, கைவினை பொருட்கள் போட்டி செந்தில் பப்ளிக் பள்ளி மாணவி சாதனை
கலை, கைவினை பொருட்கள் போட்டி செந்தில் பப்ளிக் பள்ளி மாணவி சாதனை
கலை, கைவினை பொருட்கள் போட்டி செந்தில் பப்ளிக் பள்ளி மாணவி சாதனை
கலை, கைவினை பொருட்கள் போட்டி செந்தில் பப்ளிக் பள்ளி மாணவி சாதனை
ADDED : ஜூலை 26, 2024 02:15 AM
சேலம்: சேலம், செந்தில் பப்ளிக் பள்ளி, 3ம் வகுப்பு மாணவி யாஷ்வி, அகில இந்திய அளவில் நடந்த, 'ஸ்பிளாஷ் கலை மற்றும் கைவி-னைப்போட்டி - 2023'ல், 7 முதல், -10 வயதினர் பிரிவில் முதல் பரிசை பெற்றார். ஆக்சிஸ் வங்கி நடத்திய, 'பான் இந்தியா' போட்டி, கடந்த டிசம்பரில் நடந்தது. இதில் நாடு முழுதும், 6.80 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இப்போட்டிக்கு விருது வழங்கும் விழா, கடந்த, 22ல் செந்தில் பப்ளிக் பள்ளி கலையரங்கில், ஆக்சிஸ் வங்கி சார்பில் நடந்தது. வங்கி நிர்வா-கிகள், 'ஸ்பிளாஷ்' திட்டத்தை பாராட்டி, வெற்றி பெற்ற மாணவி யாஷ்விக்கு, வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு முதல் பரிசாக, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, கோப்பை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் மனோகரன், மாணவிக்கு பாராட்டை தெரிவித்தார்.
தொடர்ந்து செந்தில் குழும பள்ளி தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, செயலர் தனசேகர் ஆகியோர், வெற்றிக்கு வழிகாட்டிய கலை ஆசிரியர்கள், சாதனை படைத்த யாஷ்வியை வாழ்த்தினர்.