/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தொழில் போட்டியில் தகராறு முதியவரை வெட்டியவர் கைது தொழில் போட்டியில் தகராறு முதியவரை வெட்டியவர் கைது
தொழில் போட்டியில் தகராறு முதியவரை வெட்டியவர் கைது
தொழில் போட்டியில் தகராறு முதியவரை வெட்டியவர் கைது
தொழில் போட்டியில் தகராறு முதியவரை வெட்டியவர் கைது
ADDED : ஜூலை 01, 2024 03:42 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவிலில் ஞாயிறுதோறும் ஆடுகளை பலி கொடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதன் அருகே உள்ள பெரியண்ணன், 51, சீரங்கன், 80, ஆகியோர் ஆடுகளை வெட்டி தோல் உரித்து, கறி வெட்டி சுத்தம் செய்யும் கூலி தொழில் செய்கின்றனர். நேற்று சீரங்கனுக்கு நிறைய ஆடுகள் சுத்தம் செய்ய கிடைத்தன. பெரியண்ணனுக்கு கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெரியண்ணன், கத்தியால் சீரங்கனின் வலது மணிக்கட்டில் வெட்டியுள்ளார். அதில் தோல் கிழிந்து ரத்தம் கொட்டியதால் சீரங்கன், மல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பனமரத்துப்பட்டி போலீசார் விசாரித்து பெரியண்ணனை நேற்று கைது செய்தனர்.