/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலம் நீதிமன்றத்தில் வாதாடிய திருநங்கை வக்கீல் சேலம் நீதிமன்றத்தில் வாதாடிய திருநங்கை வக்கீல்
சேலம் நீதிமன்றத்தில் வாதாடிய திருநங்கை வக்கீல்
சேலம் நீதிமன்றத்தில் வாதாடிய திருநங்கை வக்கீல்
சேலம் நீதிமன்றத்தில் வாதாடிய திருநங்கை வக்கீல்
ADDED : ஜூன் 14, 2024 01:50 AM
சேலம், சேலம் மாவட்டம் காகாபாளையத்தை சேர்ந்தவர் சந்திரவரதன். இவருக்கு தாத்தா ரங்கசாமி, 2018ல், 1.42 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்தார். ஆனால் மேச்சேரியை சேர்ந்த நாவேந்திரி, அந்த சொத்தில் பங்கு உள்ளதாக கூறி, சேலம் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதில் சந்திரவரதனுக்கு ஆதரவாக வாதாட, கேரள மாநிலத்தை சேர்ந்த வக்கீலான, திருநங்கை பத்மலட்சுமி, 27, என்பவரை நியமித்தார். அவர் நேற்று, சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார்.
பின் பத்மலட்சுமி கூறுகையில், ''கோர்ட்டில் வழக்குக்கு ஆஜரானது மகிழ்ச்சி. அனைத்து துறைகளிலும் திருநங்கையர் கால் ஊன்றி
வருகின்றனர்,'' என்றார்.