/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கிரேன் கம்பி அறுந்து விழுந்து ஒப்பந்த ஊழியர் 4 பேர் காயம் கிரேன் கம்பி அறுந்து விழுந்து ஒப்பந்த ஊழியர் 4 பேர் காயம்
கிரேன் கம்பி அறுந்து விழுந்து ஒப்பந்த ஊழியர் 4 பேர் காயம்
கிரேன் கம்பி அறுந்து விழுந்து ஒப்பந்த ஊழியர் 4 பேர் காயம்
கிரேன் கம்பி அறுந்து விழுந்து ஒப்பந்த ஊழியர் 4 பேர் காயம்
ADDED : ஜூன் 04, 2024 04:21 AM
மேட்டூர்,: தனியார் ஆலையில் பணி செய்யும் போது, கிரேன் கம்பி அறுந்து விழுந்து ஒப்பந்த ஊழியர்கள் நான்கு பேர் காய
மடைந்தனர்.
மேச்சேரி ஒன்றியம், பொட்டனேரி ஊராட்சியில் தனியார் இரும்பு உற்பத்தி ஆலை உள்ளது. இங்கு மேட்டூர் நகராட்சி, தங்கமாபுரிபட்டணம், கோவிந்தன், 42, ஜி.கே., இன்ஜினியரிங் என்ற பெயரில் ஒப்பந்த பணிகள் மேற்கொண்டுள்ளார். நேற்று மதியம், 12:00 மணியளவில் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஊழியர்கள் சிலர் கிரேனை பயன்படுத்தி வேலை செய்தனர். அப்போது திடீரென கிரேன் கம்பி அறுந்து, கீழே வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் மேல் விழுந்தது.
இதில் துாதுரெட்டியூர் மணிகண்டன், 29, மேச்சேரி அடுத்த சாத்தப்பாடி சத்யராஜ், 39, ஒடிசா, திகபூண்டிபரம்புரியை சேர்ந்த முன்னாபெகாரா, 25, எஸ்.வி.எஸ்., இன்ஜினியரிங் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த செவலானுார் பிரவீன்குமார், 27, ஆகிய நான்கு பேர் காயமடைந்தனர். இவர்கள் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.