/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏரியில் மண் எடுத்த 30 லாரிகள் சிறைபிடிப்பு ஏரியில் மண் எடுத்த 30 லாரிகள் சிறைபிடிப்பு
ஏரியில் மண் எடுத்த 30 லாரிகள் சிறைபிடிப்பு
ஏரியில் மண் எடுத்த 30 லாரிகள் சிறைபிடிப்பு
ஏரியில் மண் எடுத்த 30 லாரிகள் சிறைபிடிப்பு
UPDATED : ஜூலை 04, 2024 04:10 AM
ADDED : ஜூலை 04, 2024 02:18 AM

இடைப்பாடி:சேலம் மாவட்டம், ஓமலுாரில் இருந்து பரமத்தி வேலுார் வரை, நான்கு வழிச்சாலை போடப்படுகிறது.
இச்சாலை பணியில், ஈரோடைச் சேர்ந்த, 'பி அண்டு சி ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தினர் ஈடுபடுகின்றனர்.
சாலை பள்ளங்களை சமன்படுத்த, சேலம் மாவட்டம் இடைப்பாடி தாலுகா கச்சுப்பள்ளியில் உள்ள அம்மாபாளையம் ஏரியில், 5,000 கி.மீ., அளவில் மண் எடுத்துக் கொள்ள, கலெக்டர் பிருந்தாதேவி, ஜூன், 11-ல் அனுமதி அளித்திருந்தார்.
நேற்று ஏரியில், மண் எடுத்துக் கொண்டிருந்தபோது, மூன்று ஹிட்டாச்சி வாகனங்கள், 30க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை, அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர்.
அவர்களிடம், இடைப்பாடி தாசில்தார் வைத்திலிங்கம் மற்றும் கொங்கணாபுரம் போலீசார் பேச்சு நடத்தினர்.
அப்போது, அதிகளவில் மண் எடுத்ததாகவும், சாலை பணிக்கு மட்டுமின்றி குமாரபாளையத்தில் விற்பனை செய்வதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டினர்.
அதற்கு, 'புகார் அளித்தால், அளவீடு செய்து விதிமீறி இருந்தால் அபராதம் விதிக்கப்படும்' என தாசில்தார் கூறினார். பின், டிப்பர் லாரிகளில் இருந்த மண்ணை, ஏரியிலேயே கொட்டிவிட்டு அனைத்து வாகனங்களையும் வருவாய் துறையினர் விடுவித்தனர்.