ADDED : ஜூலை 20, 2024 09:35 AM
சேலம்: சேலம் மாநகரில், 17 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றி போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார். அதன்படி சேலம் மனித கடத்தல் தடுப்பு பிரிவு சந்திரகலா சேலம் டவுனுக்கும், அங்கிருந்த மோகன்பாபு கண்ணா, மதுவிலக்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
திருப்பூர் காங்கேயம் மகளிர் பிரிவில் பணியாற்றிய இந்திரா, சேலம் மனித கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், கோவை மதுக்கரை கிருஷ்ணமூர்த்தி சூரமங்கலத்துக்கும், அங்கிருந்த சசிகலா கன்னங்குறிச்சிக்கும், அங்கிருந்த செல்வராஜ் சேலம் டவுனுக்கும் மாற்றப்பட்டனர்.
ஈரோடு, கோபியில் இருந்த பழனியம்மாள் சேலம் அரசு மருத்துவமனைக்கும், கிருஷ்ணகிரி மதுவிலக்கு பிரிவு சிவகாமி சேலம் பள்ளப்பட்டிக்கும், கோவை துடியலுார் விதுன்குமார் சேலம் ஆட்டையாம்பட்டிக்கும், கோவை ஆர்.எஸ்.புரத்தில் இருந்த கலைவாணி, சேலம் டவுன் மகளிர் பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
திருப்பூர் நக்சலைட் சிறப்பு பிரிவு பாபு, சேலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கும், அங்கிருந்த சிவக்குமார் கிச்சிப்பாளையத்துக்கும், அங்கிருந்த சின்னதங்கம் இரும்பாலைக்கும், அங்கிருந்த சாரதா கொண்டலாம்பட்டிக்கும், அங்கிருந்த கண்ணன் அன்னதானப்பட்டிக்கும், அங்கிருந்த சம்பங்கி அம்மாபேட்டைக்கும், சேலம் டவுன் பிரபாகரன் இரும்பாலைக்கும் மாற்றப்பட்டனர்.
4 பேர் நியமனம்
சேலம் வடக்கு போக்குவரத்து பிரிவுக்கு வெங்கடாசலம், தெற்கு பிரிவுக்கு கிட்டு, ஆயுதப்படை கம்பெனிக்கு சேகர், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவுக்கு ஜெயவேல் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.