Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.1.36 கோடிக்குமஞ்சள் வர்த்தகம்

ரூ.1.36 கோடிக்குமஞ்சள் வர்த்தகம்

ரூ.1.36 கோடிக்குமஞ்சள் வர்த்தகம்

ரூ.1.36 கோடிக்குமஞ்சள் வர்த்தகம்

ADDED : மார் 15, 2025 02:43 AM


Google News
ரூ.1.36 கோடிக்குமஞ்சள் வர்த்தகம்

ஆத்துார்:ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 1,096 குவிண்டால் மஞ்சளை கொண்டு வந்தனர். சேலம், ஆத்துார், திருச்சி உள்ளிட்ட பகுதி வியாபாரிகள் பங்கேற்றனர்.

குவிண்டால், விரலி ரகம், 12,689 முதல், 15,634 ரூபாய்; உருண்டை ரகம், 10,569 முதல், 12,069 ரூபாய்; பனங்காலி(தாய் மஞ்சள்) 17,119 முதல், 25,122 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 1.36 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த, 6ல் நடந்த மஞ்சள் ஏலத்தை விட, குவிண்டாலுக்கு விரலி ரகம், 855 ரூபாய்; பனங்காலி ரகம், 813 ரூபாய் விலை உயர்ந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us