வி.சி., ஆர்ப்பாட்டம்:130 பேர் கைது
வி.சி., ஆர்ப்பாட்டம்:130 பேர் கைது
வி.சி., ஆர்ப்பாட்டம்:130 பேர் கைது
ADDED : மார் 21, 2025 01:29 AM
வி.சி., ஆர்ப்பாட்டம்:130 பேர் கைது
சேலம்:வி.சி., கட்சி சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் தமிழகத்தில் ஜாதி வெறியர்களால் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து ஏவப்படும் வன்முறையை கண்டித்தும், திருமாவளவன் படத்தை சேதப்படுத்தும் கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். மாவட்ட துணை செயலர் காயத்ரி, மாவட்ட செயலர் சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், 130 பேரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.