ADDED : ஜூன் 02, 2025 06:46 AM
மேட்டூர்: மேட்டூரை சேர்ந்த, கல் உடைக்கும் தொழிலாளி ஜோசப் திரவியம், 43. இவரது மனைவி ரூபி செலினா, 40. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடால், கணவரை பிரிந்த ரூபி செலினா, மகள்களுடன், சேலம், கோரிமேட்டில் வசிக்கிறார்.
ஜோசப்திரவியம், அவரது தங்கை அந்தோணி மேரி வீட்டில் தங்கி, வேலைக்கு சென்றுவந்தார். கடந்த, 29 காலை, வேலைக்கு செல்வதாக புறப்பட்ட அவர், இரு நாட்களாக வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே இறந்து கிடந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக, ரூபி செலினா அளித்த புகார்படி கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.