/உள்ளூர் செய்திகள்/சேலம்/ போதை ஊசியால் வாலிபர் பலி நண்பரிடம் விசாரணை போதை ஊசியால் வாலிபர் பலி நண்பரிடம் விசாரணை
போதை ஊசியால் வாலிபர் பலி நண்பரிடம் விசாரணை
போதை ஊசியால் வாலிபர் பலி நண்பரிடம் விசாரணை
போதை ஊசியால் வாலிபர் பலி நண்பரிடம் விசாரணை
ADDED : ஜூலை 28, 2024 03:48 AM
சேலம்: உடல் நலம் பாதிக்கப்பட்டு வாலிபர் உயிரிழந்த நிலையில் போதை ஊசியால் இறந்திருக்கலாம் என்பதால் அவரது நண்பரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம், அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகரை சேர்ந்த காஜாமைதீன் மகன் ஜபருல்லா, 21. பெற்றோரை இழந்த இவர், திருச்சியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை, நண்பர் நவீத், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.
ஆனால் மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டது தெரிந்தது. பிரேத பரிசோதனை அறிக்கைப்படி, மருத்துவமனை போலீசார் விசாரித்தனர். அதில், ஜபருல்லா, நவீத் ஆகியோர், போதை ஊசி பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரிந்தது. இதனால் நவீத்திடம் போலீசார் விசாரிக்கின்றனர்.