Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'அனைவரும் இணைந்து செயல்படுவதால் நாட்டின் எதிர்காலம் குறித்த கவலை இல்லை'

'அனைவரும் இணைந்து செயல்படுவதால் நாட்டின் எதிர்காலம் குறித்த கவலை இல்லை'

'அனைவரும் இணைந்து செயல்படுவதால் நாட்டின் எதிர்காலம் குறித்த கவலை இல்லை'

'அனைவரும் இணைந்து செயல்படுவதால் நாட்டின் எதிர்காலம் குறித்த கவலை இல்லை'

ADDED : ஜூலை 19, 2024 02:44 AM


Google News
கும்லா: ஜார்க்-கண்ட மாநி-லம் கும்-லா-வில் நடந்த நிகழ்ச்சி ஒன்-றில், ஆர்.எஸ்.எஸ்., தலை-வர் மோகன் பாக-வத் பேசி-ய-தா-வது:

வளர்ச்சி மற்-றும் மனி-தர்-க-ளின் லட்-சி-யங்-க-ளுக்கு என, எந்த ஒரு வரை-ய-றை-யும், எல்-லை-யும் கிடை-யாது. அத-னால், மனி-த-கு-லத்-தின் வளர்ச்-சிக்-காக அனை-வ-ரும் அய-ராது உழைக்க வேண்-டும்.

சனா-தன தர்-மம்

நம்-மு-டைய நாட்-டின் கலா-சா-ரம், பாரம்-ப-ரி-யம், மற்-ற-வர்-க-ளுக்கு உதவ வேண்-டும் என்ற இயற்கை குணத்தை நமக்கு கொடுத்-துள்-ளது. இந்த குணம், நமக்கு வயல் வெளி-களில் இருந்-தும், காடு-களில் இருந்-தும் கிடைத்-துள்-ளது. இதில் இருந்-து-தான், சனா-தன தர்-மம் உரு-வா-னது.

சனா-தன தர்-மம் என்-பது அர-சர்-க-ளின் மாளி-கை-களில் இருந்து நமக்கு கற்-றுத் தரப்-ப-ட-வில்லை. ஆசி-ர-மங்-களில் இருந்-தும், காடு-களில் இருந்-தும் கற்-றுத் தரப்-பட்-டது. மற்-ற-வர்-க-ளுக்கு உத-வு-வது என்-ப-து-தான், சனா-தன தர்-ம-மா-கும். மற்-ற-வர்-க-ளின் நல-னை-யும் பார்ப்-ப-து-தான் சனா-தன தர்-மம்.

நம்-மு-டைய உடை, நடை, வாழ்க்கை முறை மாறி-யி-ருக்-க-லாம். ஆனால், இந்த இயற்-கை-யான குணம் மாற-வில்லை.மாறி வரும் காலத்-துக்கு ஏற்ப, மற்-ற-வர்-க-ளுக்கு எப்-படி உத-வ-லாம் என்-ப-தில் வேண்-டு-மா-னால் மாற்-றம் இருக்-க-லாம். ஆனால், மற்-ற-வர்-க-ளுக்கு உத-வு-வது என்ற இயற்கை குணம் மாற-வில்லை.

சிந்தனைகள்

நம் நாட்-டில், 33 கோடி கட-வுள்-கள், 3,800 மொழி-கள் என, பல-வ-கை-யான மாறு-பா-டு-கள் இருக்-க-லாம். ஆனால், நம்-மு-டைய சிந்-த-னை-கள் ஒன்-றாக உள்-ளது. அது, நாமும் வளர்ந்து, மற்-ற-வர்-களும் வளர்ச்சி அடை-வ-தாக உள்-ளது. இவ்-வாறு ஒட்-டு-மொத்த நாடும் ஒரே சிந்-த-னை-யு-டன் இருப்-ப-தால், நம் நாட்-டின் எதிர்-கா-லம் குறித்து கவ-லைப்-பட வேண்-டி-ய-தில்லை.

கொரோனா காலத்-தில், உலக நாடு-கள், நம்-மு-டைய இந்த குணத்தை பார்த்து ஆச்-ச-ரி-யப்-பட்-டன. நம்-மு-டைய இந்த இயற்-கை-யான குணமே, உல-கின் பிரச்-னை-க-ளுக்கு தீர்-வாக இருக்-கும் என்-பதை அவை உணர்ந்-துள்-ளன.

இவ்-வாறு அவர் பேசி-னார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us