/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டி சேலம், கோவை அணிகள் வெற்றி 16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டி சேலம், கோவை அணிகள் வெற்றி
16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டி சேலம், கோவை அணிகள் வெற்றி
16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டி சேலம், கோவை அணிகள் வெற்றி
16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டி சேலம், கோவை அணிகள் வெற்றி
ADDED : ஜூலை 23, 2024 01:15 AM
சேலம் : சேலத்தில் நடந்த மண்டல அளவிலான, 16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், சேலம், கோவை அணிகள் வெற்றி பெற்றன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள, 29 மாவட்டங்களை வேலுார், திண்டுக்கல், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, துாத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை என எட்டு மண்டலங்களாக பிரித்து ஆண்டுதோறும் மண்டல அளவில், 16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது.
நேற்று சேலம் இரும்பாலை விளையாட்டு மைதானத்தில் சேலம், கோயமுத்தூர், மயிலாடுதுறை, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான போட்டி நடந்தது. முதல் நாள் போட்டியில் சேலம், தர்மபுரி மாவட்ட அணிகள் மோதியது. முதலில் விளையாடிய சேலம் அணி 50 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு, 292 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய தர்மபுரி அணி, 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் சேலம் அணி வெற்றி பெற்றது.
இதே போல் நேற்று சேலம் அரசு இன்ஜினியரிங் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியில் கோவை, மயிலாடுதுறை மாவட்ட அணிகள் மோதின. முதலில் ஆடிய மயிலாடுதுறை அணி, 48 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 139 ரன்களை எடுத்தது.
அடுத்து விளையாடிய கோவை அணி, 30.5 ஓவரில், 4 விக்கெட்களை இழந்து, 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இன்று இரும்பாலை மைதானத்தில் சேலம், கோவை அணிகளும், அரசு இன்ஜினியரிங் கல்லுாரி மைதானத்தில் தர்மபுரி, மயிலாடுதுறை அணிகளும் மோதவுள்ளன.நாளை இரும்பாலை மைதானத்தில் தர்மபுரி, கோவை அணியும், அரசு இன்ஜினியரிங் கல்லுாரி மைதானத்தில் சேலம், மயிலாடுதுறை அணியும் மோதுகின்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் பாபுகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.