/உள்ளூர் செய்திகள்/சேலம்/ துப்பாக்கி சுடும் போட்டி மாநகர கமிஷனர் முதலிடம் துப்பாக்கி சுடும் போட்டி மாநகர கமிஷனர் முதலிடம்
துப்பாக்கி சுடும் போட்டி மாநகர கமிஷனர் முதலிடம்
துப்பாக்கி சுடும் போட்டி மாநகர கமிஷனர் முதலிடம்
துப்பாக்கி சுடும் போட்டி மாநகர கமிஷனர் முதலிடம்
ADDED : ஜூலை 31, 2024 07:25 AM
சேலம்: சேலம் மேற்கு மண்டலத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி, சூரமங்கலம் அருகே நகரமலை அடி-வாரத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. எஸ்.பி., அருண்கபிலன் தொடங்கி வைத்தார்.
நேற்று, எஸ்.பி.,க்கு மேல் உள்ள ரேங்கில், 9 எம்.எம்., துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. அதில் முதல் மூன்று இடங்கள் முறையே, சேலம் மாநகர கமிஷனர் பிரவீன்குமார் அபி-னபு, ஈரோடு எஸ்.பி., ஜவகர், சேலம் எஸ்.பி., அருண் கபிலன் பெற்றனர். அதேபோல், 'இன்சாஸ்' ரக பிரிவில் பிரவீன்குமார் அபினபு, ஜவகர், கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை ஆகியோர், முதல் மூன்று இடங்களை பெற்-றனர்.