/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'பெல்ட்'டால் தாயை தாக்கிய 'போதை' மகன் கைது 'பெல்ட்'டால் தாயை தாக்கிய 'போதை' மகன் கைது
'பெல்ட்'டால் தாயை தாக்கிய 'போதை' மகன் கைது
'பெல்ட்'டால் தாயை தாக்கிய 'போதை' மகன் கைது
'பெல்ட்'டால் தாயை தாக்கிய 'போதை' மகன் கைது
ADDED : ஜூலை 31, 2024 07:33 AM
சேலம்: சேலம், வலசையூர், சுந்தர் ராஜன் தெருவை சேர்ந்தவர் மஞ்சுளா, 52. இவரது மகன் ராம்-குமார், 26. டிப்ளமோ படித்துவிட்டு, 4 ரோட்டில் உள்ள ஜவுளி கடையில் பணிபுரிகிறார். இவ-ருக்கு திருமணமான நிலையில், மனைவி பிரிந்து சென்று விட்டார். கடந்த, 26ல் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த ராம்குமார், தாயிடம் வேறு திருமணம் செய்து கொள்ள பணம் வேண்டும் என கேட்டார்.
அப்போது தங்கைக்கு மட்டும் பணம் கொடுப்-பதாக கூறி தகராறில் ஈடுபட்டார். மஞ்சுளா, பணம் இல்லை எனக்கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ராம்குமார், 'பெல்ட்'டால் மஞ்சுளாவை தாக்கினார். காயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் புகார்படி வீராணம் போலீசார் ராம்குமாரை நேற்று கைது செய்தனர்.