Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இயற்கை முறையில் பூச்சிகளை அழிக்க 'மெட்டாரைசியம்' பயன்படுத்த அறிவுரை

இயற்கை முறையில் பூச்சிகளை அழிக்க 'மெட்டாரைசியம்' பயன்படுத்த அறிவுரை

இயற்கை முறையில் பூச்சிகளை அழிக்க 'மெட்டாரைசியம்' பயன்படுத்த அறிவுரை

இயற்கை முறையில் பூச்சிகளை அழிக்க 'மெட்டாரைசியம்' பயன்படுத்த அறிவுரை

ADDED : ஆக 04, 2024 01:17 AM


Google News
பனமரத்துப்பட்டி, இயற்கை முறையில் பூச்சிகளை அழிக்க, 'மெட்டாரைசியம்' பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறியதாவது:

மக்காச்சோளம் பயிரை பாதிக்கும் ராணுவ படைப்புழு, காண்டாமிருக வண்டு, அசுவினி, வெள்ளை ஈ, கூன்வண்டு, மாவுப்பூச்சி இலைப்பேன், சிலந்தி பேன், மலைப்பயிர்கள், காய்கறி பயிர்களின் புழுக்கள், வேர் வண்டு ஆகியவற்றை இயற்கை முறையில் கட்டுப்படுத்த மெட்டாரைசியம் பயன்படுகிறது.

மெட்டாரைசியம் எதிர் உயிரி பூச்சிகொல்லி வண்டு மற்றும் பூச்சிகளின் தோல் மீது படர்ந்து, வளர்ந்து உள்ளே ஊடுருவி செல்கிறது. பூச்சிகளின் உடலிலுள்ள திரவத்தை மெல்ல மெல்ல உறிஞ்சுவதால் பூச்சிகள் இறந்துவிடுகின்றன.

அதற்கு, 100 கிலோ தொழு உரத்துடன், 1 கிலோ மெட்டாரைசியம் கலந்து மண்ணில் இடலாம். ஒரு லிட்டர் நீரில், 8 கிராம் மெட்டாரைசியம் கலந்து பயிர்கள் மீது தெளிக்கலாம். மக்காச்சோள பயிரில் ஆரம்ப கட்டத்தில் ராணுவ படைப்புழுவை கட்டுப்படுத்த, ஒரு ஹெக்டேருக்கு, 4 கிலோ மெட்டாரைசியம் வீதம் தெளிக்க வேண்டும். தென்னை மரத்தை பாதிக்கும் காண்ட மிருக வண்டு எருக்குழியில் புழுக்களை உற்பத்தி செய்யும். எருக்குழியில் கடப்பாறையால் குழி தோண்டி, ஒரு லிட்டர் நீரில், 5 கிராம் மெட்டாரைசியம் கலந்து ஊற்றி, இளம் புழுக்களை அழிக்கலாம். மெட்டாரைசியம் எதிர் உயிரி பூச்சிக்கொல்லியை, பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us