/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆடுகள் வரத்து சரிவு; ரூ.3 கோடிக்கு விற்பனை ஆடுகள் வரத்து சரிவு; ரூ.3 கோடிக்கு விற்பனை
ஆடுகள் வரத்து சரிவு; ரூ.3 கோடிக்கு விற்பனை
ஆடுகள் வரத்து சரிவு; ரூ.3 கோடிக்கு விற்பனை
ஆடுகள் வரத்து சரிவு; ரூ.3 கோடிக்கு விற்பனை
ADDED : ஜூலை 28, 2024 03:47 AM
இடைப்பாடி: சந்தையில் ஆடுகள் வரத்து சரிந்த நிலையில், 3 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
கொங்கணாபுரத்தில் ஆட்டுச்சந்தை நேற்று கூடியது. அதில், 4,030 ஆடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதில், 10 கிலோ வெள்ளாடு, 7,650 முதல், 8,600 ரூபாய்; செம்மறியாடு, 7,300 முதல், 7,400 ரூபாய் வரை விலைபோனது.
இதன்மூலம், 3.10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை விட, 320 ஆடுகள் குறைவாக, இந்த வாரம் கொண்டு வரப்பட்டதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
பருத்தி, எள் ஏலம்
அதேபோல் கொங்கணாபுரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில், 4,000 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதன்மூலம், 95 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தொடர்ந்து நடந்த எள் ஏலத்தில் 35 மூட்டைகளை கொண்டுவந்தனர்.
வெள்ளை எள் கிலோ, 105 முதல், 136 ரூபாய் வரை விலைபோ-னது. இதன்மூலம், 2.75 லட்சம் ரூபாய்க்கு எள் விற்பனை நடந்-தது.