/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விழிப்புணர்வு மாரத்தான் 1,750 பேர் பங்கேற்பு விழிப்புணர்வு மாரத்தான் 1,750 பேர் பங்கேற்பு
விழிப்புணர்வு மாரத்தான் 1,750 பேர் பங்கேற்பு
விழிப்புணர்வு மாரத்தான் 1,750 பேர் பங்கேற்பு
விழிப்புணர்வு மாரத்தான் 1,750 பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 22, 2024 07:00 AM
சங்ககிரி : சங்ககிரி மாரத்தான் குழு சார்பில், மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்போட்டி நேற்று அதிகாலை நடந்தது. பல்வேறு பிரிவுகளில், 5 கி.மீ.,க்கு போட்டிகள் நடத்-தப்பட்டன. சங்ககிரி மலை அடிவாரத்தில் தொடங்கி, ஈஸ்வரன் கோவில், சந்தைப்பேட்டை, குப்பனுார் பைபாஸ் வரை சென்று திரும்பும்படி போட்டி நடந்தது. அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவியர், 1,300 பேர் உள்பட, தேனி, மதுரை, தஞ்சாவூர், ஊட்டி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 1,750 பேர் பங்கேற்றனர். இதன் முடிவில், 10 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் பிரிவில் லிச்சனா, சசிதா, முதல் இரு இடங்-களை பிடித்தனர்.
அதேபோல், 14 வயது சிறுவர் பிரிவில் தினேஷ், மணிகண்டன்; சிறுமியர் பிரிவில் கார்த்திகா, ரமிதா; 18 வயது சிறுவர் பிரிவில் கோகுலவாசன், திவ்யபிரகாசம்; சிறுமியர் பிரிவில் ரித்திக்ஷாஸ்ரீ, பவித்ரா; 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் மாரிசரத், ரஞ்-சித்குமார்; பெண்கள் பிரிவில் சுகன்யா, கவுரி; 40 வயதுக்கு மேற்-பட்ட ஆண்கள் பிரிவில் சண்முகம், துரைசாமி; பெண்கள் பிரிவில் ரேணுகா, சுகந்தி ஆகியோர், முதல் இரு இடங்களை பெற்றனர். அனைத்து பிரிவிலும் முதல், 10 இடங்களை பெற்ற-வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை, சங்ககிரி மாரத்தான் குழு, சங்ககிரி சேரிடபுள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர். லாரி உரிமையாளர் சங்கம், லயன்ஸ் சங்கம், கொங்கணாபுரம் ரோட்டரி கிளப்
நிர்வாகிகள் பங்கேற்றனர்.