/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'அன்புக்கரங்கள்' திட்டத்தில் 155 குழந்தைக்கு உதவித்தொகை 'அன்புக்கரங்கள்' திட்டத்தில் 155 குழந்தைக்கு உதவித்தொகை
'அன்புக்கரங்கள்' திட்டத்தில் 155 குழந்தைக்கு உதவித்தொகை
'அன்புக்கரங்கள்' திட்டத்தில் 155 குழந்தைக்கு உதவித்தொகை
'அன்புக்கரங்கள்' திட்டத்தில் 155 குழந்தைக்கு உதவித்தொகை
ADDED : செப் 16, 2025 01:41 AM
சேலம்,தமிழக அரசு சார்பில், 'தாயுமானவர்' திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, மாதந்தோறும், 2,000 ரூபாய் வழங்கும், 'அன்புக்கரங்கள்' திட்டத்தை, சேலம், குகை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று தொடங்கி வைத்தார்.
அதில் சேலம் மாவட்டத்தில் பயன்பெறும், 155 குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். கலெக்டர் பிருந்தாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவி ஜெயந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
சந்தியா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.