/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.1.25 கோடி மோசடி வாலிபரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை ரூ.1.25 கோடி மோசடி வாலிபரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை
ரூ.1.25 கோடி மோசடி வாலிபரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை
ரூ.1.25 கோடி மோசடி வாலிபரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை
ரூ.1.25 கோடி மோசடி வாலிபரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை
ADDED : ஜூலை 18, 2024 02:16 AM
சேலம்: ஹோட்டல் உரிமையாளர் எனக்கூறி, ரூ.1.25 கோடி மோசடி செய்த வாலிபரை, போலீசார் மூன்று நாள் காவலில் எடுத்து விசா-ரித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், விசாகபட்டணத்தை சேர்ந்தவர் பரணிகுமார், 38, இவர் சேலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் மேலாளராகவும், அவரது மனைவி விஜயலாவண்யா சூப்பர் வைசராகவும் பணி-புரிந்தனர். ஹோட்டலுக்கு வந்தவர்களிடம், தாங்கள் இருவரும் ஹோட்டல் உரிமையாளர்கள் எனவும், பங்கு தாரராக சேர்த்துக் கொள்வதாகவும் கூறி,
பலரிடமும் பணம் வாங்கியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தில் இருவரும் ஹோட்டலுக்கு வருவதை நிறுத்திக்கொண்டனர். பணம் கொடுத்தவர்கள் விசாரித்த போது, அவர்கள் வேலை செய்ததும், ஏமாற்றியதும் தெரியவந்தது. சந்தோஷ் என்பவர் உள்பட 14 பேர், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். ரூ.1.25 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து விசாகபட்டணத்திலிருந்த பரணிகு-மாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க, சேலம் நீதிமன்-றத்தில் மனுதாக்கல் செய்தனர். மூன்று நாட்களுக்கு காவலில் விசாரிக்க, அனுமதியளிக்கப்பட்டுள்ளது.