ADDED : மே 25, 2025 01:15 AM
மேட்டூர், மேட்டூர் அணை கரையோரம் உள்ள தின்னப்பட்டி ஊராட்சி, சேத்துக்குழி அடுத்த ஆணை கவுண்டனுாரை சேர்ந்த மீனவர் சுப்ரமணி, 54. இவரது மனைவி மாரக்காள், 53. நேற்று அதிகாலை, சேத்துக்குழியில் பரவலாக மழை பெய்தது. அப்போது சுப்ரமணி
வீட்டின் இருபக்க சுவர் இடிந்து விழுந்தது.
அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. வி.ஏ.ஓ., முத்தப்பன், சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டார்.