ஆட்டோ தொழிலாளர்சங்கம் ஆர்ப்பாட்டம்
ஆட்டோ தொழிலாளர்சங்கம் ஆர்ப்பாட்டம்
ஆட்டோ தொழிலாளர்சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 23, 2025 01:02 AM
ஆட்டோ தொழிலாளர்சங்கம் ஆர்ப்பாட்டம்
சேலம்:சி.ஐ.டி.யு., ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார்.
அதில், 13 ஆண்டாக ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், எரிபொருள், உதிரிபாகங்கள், பராமரிப்பு செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. 1.5 கி.மீ., குறைந்தபட்ச கட்டணம், 50 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். சி.ஐ.டி.யு., சுமை தொழிலாளர் சங்க மாநில உதவி தலைவர் வெங்கடபதி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் உதயகுமார், அண்ணா ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட, ஆட்டோ
தொழிலாளர்கள் பங்கேற்றனர்.