/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏட்டுக்கு பீர் பாட்டிலால் குத்து வெல்டிங் தொழிலாளி கைது ஏட்டுக்கு பீர் பாட்டிலால் குத்து வெல்டிங் தொழிலாளி கைது
ஏட்டுக்கு பீர் பாட்டிலால் குத்து வெல்டிங் தொழிலாளி கைது
ஏட்டுக்கு பீர் பாட்டிலால் குத்து வெல்டிங் தொழிலாளி கைது
ஏட்டுக்கு பீர் பாட்டிலால் குத்து வெல்டிங் தொழிலாளி கைது
ADDED : ஜூலை 21, 2024 09:40 AM
நங்கவள்ளி : நங்கவள்ளி அருகே சின்னசோரகை, வேப்பமரத்-துப்பட்டியை சேர்ந்தவர் கஸ்துாரி, 23. இவரது வீடு முன், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, கொசப்பட்டியை சேர்ந்த, வெல்டிங் தொழிலாளி சக்திவேல், 27, 'குடி'போதையில் தகராறு செய்வதாக, போலீஸ் எண், 100க்கு தகவல் சென்றது. இதையடுத்து நங்கவள்ளி ஸ்டேஷனில் இருந்து, எஸ்.எஸ்.ஐ., அழகேசன், ஏட்டு பிரசாந்த், 31, ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அங்கு, உடைக்கப்பட்ட பீர் பட்டிலுடன் இருந்த சக்திவேலை பிடிக்க முயன்றபோது, பிரசாந்த் கையிலும், தாடையிலும் பாட்டில் குத்து விழுந்-தது. பின் சக்திவேல் தப்ப முயன்றபோது, தடு-மாறி விழுந்ததில் காயம் அடைந்து, போலீசா-ரிடம் சிக்கினார். அதேநேரம் காயம் அடைந்த பிரசாந்த், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கஸ்துாரி, பிரசாந்த் ஆகியோர் தனித்தனியே நேற்று அளித்த புகார்படி, சக்திவேல் மீது கொலை முயற்சி, அரசு பணிக்கு இடையூறு உள்-ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து அவரை கைது செய்தனர்.