/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் மயிலாடுதுறை, கோவை வெற்றி 16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் மயிலாடுதுறை, கோவை வெற்றி
16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் மயிலாடுதுறை, கோவை வெற்றி
16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் மயிலாடுதுறை, கோவை வெற்றி
16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் மயிலாடுதுறை, கோவை வெற்றி
ADDED : ஜூலை 24, 2024 07:49 AM
சேலம் : தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் சேலம் மண்டலத்துக்குட்-பட்ட சேலம், கோவை, மயிலாடுதுறை, தர்மபுரி மாவட்டங்கள் அடங்கிய, மண்டல போட்டி, 16 வயதுக்குட்பட்டோருக்கு நேற்று முன்தினம் தொடங்கியது. 2ம் நாளான நேற்று, சேலம், இரும்பாலை மைதானத்தில் நடந்த போட்டியில் மயிலாடுதுறை - தர்மபுரி அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த மயிலாடுதுறை அணி, 49.6 ஓவர்-களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 198 ரன்கள் எடுத்-தன. அடுத்து விளையாடிய தர்மபுரி அணி, 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 183 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால், 15 ரன்கள் வித்தியாசத்தில் மயிலாடுதுறை வெற்றி பெற்றது.
அதேபோல், சேலம் அரசு இன்ஜினியரிங் கல்லுாரி விளை-யாட்டு மைதானத்தில் நடந்த போட்டியில், முதலில் விளையா-டிய சேலம் அணி, 50 ஓவர் முடிவில் 153 ரன்கள் எடுத்தன. அடுத்து ஆடிய கோவை அணி, 41.1 ஓவரில், 8 விக்கெட்களை இழந்து, 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இறுதி நாளான இன்று, இரும்பாலை மைதானத்தில் தர்மபுரி, கோவை அணிகள், அரசு இன்ஜினியரிங் கல்லுாரி மைதானத்தில் சேலம், மயிலாடு-துறை அணிகள் மோதுகின்றன.