Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உச்சநீதிமன்றத்தில் நிலுவை வழக்கு தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் நிலுவை வழக்கு தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் நிலுவை வழக்கு தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் நிலுவை வழக்கு தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம்

ADDED : ஜூலை 02, 2024 07:00 AM


Google News
சேலம், : உச்ச நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடித்துக் கொள்ளும் வகையில், சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஜூலை, 29 முதல், ஆக., 3 வரை நடக்கிறது.

சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வெளியிட்டுள்ள அறிக்கை:

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள

வழக்குகளை, மக்கள் நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ளும் வகையில், ஜூலை 29 முதல், ஆக., 3 வரை சிறப்பு மக்கள் நீதி-மன்றம் நடைபெற உள்ளது.

மேற்படி நிலுவை வழக்கு களில், வழக்காடிகளுக்கிடையே சமரச பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உதவி எண்-044 25342441 அல்லது இலவச அழைப்பு எண்-15100 என்ற எண்களில் அழைக்கலாம்.

சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடக்கும், மாவட்ட சட்-டப்பணிகள் ஆணைக்குழு அல்லது ஆத்துார், மேட்டூர், சங்ககிரி, ஓமலுார், இடைப்பாடி, வாழப்பாடி, ஏற்காடு உள்ளிட்ட 7 தாலுகா நீதிமன்றங்களில் செயல்படும் வட்ட சட்ட பணிகள் குழுக்களை தொடர்பு கொள்ளலாம்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us