/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலம் பள்ளப்பட்டி ஏரி பூங்காவில் தீ விபத்து ரூ. 70 லட்சம் செயற்கை குகை எரிந்து நாசம் சேலம் பள்ளப்பட்டி ஏரி பூங்காவில் தீ விபத்து ரூ. 70 லட்சம் செயற்கை குகை எரிந்து நாசம்
சேலம் பள்ளப்பட்டி ஏரி பூங்காவில் தீ விபத்து ரூ. 70 லட்சம் செயற்கை குகை எரிந்து நாசம்
சேலம் பள்ளப்பட்டி ஏரி பூங்காவில் தீ விபத்து ரூ. 70 லட்சம் செயற்கை குகை எரிந்து நாசம்
சேலம் பள்ளப்பட்டி ஏரி பூங்காவில் தீ விபத்து ரூ. 70 லட்சம் செயற்கை குகை எரிந்து நாசம்
ADDED : ஜூலை 23, 2024 01:07 AM
சேலம் : சேலம் பள்ளப்பட்டி ஏரி பூங்காவில்,70 லட்சம் ரூபாய் மதிப்-பீட்டில் அமைக்கப்பட்ட செயற்கை குகை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதும் எரிந்து நாசமானது.
சேலம் பள்ளப்பட்டி ஏரியை மேம்படுத்தி, பல்வேறு அம்சங்க-ளுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கும் பணி நடந்துவருகிறது. 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் சீர்மிகு நகர திட்டத்தில், ஏரியின் கரைகளை பலப்படுத்தி, ஏரிக்குள் உள்ள கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி தூர்-வாரி ஏரியை சுற்றியுள்ள சாலைகளை சீரமைத்து, படகு இல்லம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், குழந்தைகளை கவரும் வகையில் வன விலங்குகளின் மாதிரிகள், பல்வேறு உபக-ரணங்களை கொண்ட விளையாட்டு பூங்கா, பொதுமக்கள் நடைப்-பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக நடைமேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏரியின் கரை ஓரத்தில், 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த விலங்குகளின் மாதிரிக-ளுடன் கூடிய செயற்கை குகை, நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது.
செவ்வாய்பேட்டை மற்றும் சூரமங்கலம் நிலைய தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் வானில் கரும்புகை சூழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பள்ளப்பட்டி ஏரியில் முறையான பாதுகாப்பு மற்றும் கண்கா-ணிப்பு இல்லை என்றும் இதனால் சமூக விரோதிகள் பள்ளப்-பட்டி ஏரியில் மது அருந்துதல் கஞ்சா மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. சமூகவிரோதி-களின் செயலால்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் அப்பகு-தியினர் தெரிவித்தனர்.